Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பை இயல்பு நிலைக்கு திரும்ப காத்திருக்கும் டப்பாவாலாக்கள்

மும்பை இயல்பு நிலைக்கு திரும்ப காத்திருக்கும் டப்பாவாலாக்கள்

By: Karunakaran Fri, 12 June 2020 1:31:16 PM

மும்பை இயல்பு நிலைக்கு திரும்ப காத்திருக்கும் டப்பாவாலாக்கள்

டப்பாவாலாக்கள் என்பவர்கள் அலுவலகங்களிலும், கம்பெனிகளிலும் வேலை பார்க்கிறவர்களுக்கு வீடுகளில் இருந்து சமைக்கப்பட்ட உணவுகளை டப்பாக்களில் பெற்று உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வழங்கிவிட்டு, காலி டப்பாக்களை மீண்டும் அவர்களது வீடுகளில் கொண்டு போய் சேர்ப்பர். இந்த மகத்தான பணியை நேர்த்தியாக செய்து முடிப்பவர்கள் தான் டப்பாவாலாக்கள். மும்பையில் டப்பாவாலாக்கள் மிகவும் பிரபலம்.

சைக்கிள், இரு சக்கர வாகனம், நடை, ரெயில் என பல்வேறு வழிகளில் இவர்கள் இந்த வேலையை செய்து வருகின்றனர். மும்பையில் 5 ஆயிரம் டப்பா வாலாக்கள் உள்ளனர். ஏறத்தாழ 2 லட்சம் பேருக்கு உணவு டப்பாக்களை இவர்கள் வழங்கி வருகின்றனர். மும்பையில் 125 ஆண்டுகளாக இவர்கள் இந் த பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

dabbawala,mumbai,coronavirus,curfew ,டப்பாவாலா,மும்பை,டப்பா,கொரோனா

டப்பா வாலாக்கள் மாதத்துக்கு தலா ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிப்பர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கினால் டப்பாவாலாக்களின் பிழைப்பு மிகவும் மோசமாகி விட்டது. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி தொடங்கியபோதே, டப்பா வாலாக்கள் ஜூன்னார், அம்பேகான், ராஜ்குருநகர், மாவல், ஹவேலி, முல்ஷி உள்ளிட்ட தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டனர். பெரும்பாலான டப்பாவாலாக்கள் புனேயின் மாவல் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஊரடங்கால் மார்ச் மாதம் வசூலிக்க வேண்டிய சம்பளத்தை கூட பலரால் வசூலிக்க முடியவில்லை. இதுகுறித்து மும்பை டப்பாவாலாக்கள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் சுபாஷ் டாலேகர் கூறுகையில், அரசாங்கம் இப்போது அலுவலகங்கள், நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து விட்டது. ஆனால் எங்கள் டப்பாவாலாக்கள் எப்போது திரும்பி வருவார்கள்? எப்போது அவர்கள் தங்கள் சேவையை தொடர்வார்கள் என்பதில் ஒரு நிச்சயமற்ற நிலைதான் உள்ளது. ரெயில்கள் மீண்டும் ஓடத்தொடங்குகிறவரை எங்கள் சேவையை நாங்கள் தொடங்க முடியாது " என்று தெரிவித்துள்ளார்.

மும்பை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே டப்பாவாலாக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags :
|