Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் தினசரி பாதிப்பு இன்று 4-வது நாளாக குறைந்தது

இந்தியாவில் தினசரி பாதிப்பு இன்று 4-வது நாளாக குறைந்தது

By: vaithegi Tue, 09 Aug 2022 11:14:17 AM

இந்தியாவில் தினசரி பாதிப்பு இன்று 4-வது நாளாக குறைந்தது

இந்தியா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில நாட்களாகவே உயர்ந்து வந்த தினசரி பாதிப்பு இன்று 4-வது நாளாக குறைந்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், இது 12 ஆயிரத்து 751 ஆக குறைந்தது.

எனவே இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 74 ஆயிரத்து 650 ஆக உயர்ந்தது. கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 412 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 4 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 71 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

india,corona ,இந்தியா,கொரோனா

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு நேற்று 41 பேர் பலியாகி இருந்தனர். இன்று பலி எண்ணிக்கை 41 ஆக சற்று அதிகரித்தது. இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 772 பேர் இறந்துள்ளனர்.

அதேவேளை நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,06,88,49,775 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 31,95,034 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

Tags :
|