Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் ... அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் ... அமைச்சர் மா. சுப்பிரமணியன்

By: vaithegi Tue, 27 Dec 2022 12:38:31 PM

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ்   ...   அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் ... சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் , தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழிருந்து கொண்டு வருகிறது. கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51 ஆக உள்ளது. மாதிரிகள் பகுப்பாய்வு செய்யும் வசதி தமிழகத்திலேயே உள்ளது.

ma. subramanian,corona ,மா. சுப்பிரமணியன் ,கொரோனா

தமிழகத்தில் உள்ள மொத்த படுக்கை வசதிகள் 1 லட்சத்து 75 ஆயிரத்து 691 ஆக உள்ளது. இதில் கொரோனா படுக்கை வசதிகள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 471. ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள் 68,624. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 37 ஆயிரத்து 526. தீவிர சிகிச்சை படுக்கைகள் 8321 ஆக உள்ளது.

எனவே இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒட்டுமொத்த படுக்கை விவரங்கள் ஆகும். அரசு மருத்துவமனையில் மட்டும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 360 ஆக உள்ளது என அவர் கூறினார்.

Tags :