Advertisement

மீண்டும் உச்சத்தை தொடும் தினசரி கொரோனா பரவல்

By: vaithegi Mon, 10 Apr 2023 3:08:14 PM

மீண்டும் உச்சத்தை தொடும் தினசரி கொரோனா பரவல்

இந்தியா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 5880 பேர் பாதித்து இருப்பதாக தகவல் ....நாடு முழுவதும் மக்கள் கொரோனா வைரஸால் சிக்கி தவித்து கொண்டு வருகின்றனர். கொரோனாவில் இருந்து மீள தடுப்பூசி தான் ஒரே ஆயுதமாக இருந்தாலும், அதிலிருந்து முற்றிலுமாக மீள முடியாத நிலை இருக்கிறது.

இந்த நிலையில் கொரோனாவின் கோரத்தாண்டவம் கடந்த சில மாதங்களாகவே அடங்கிய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது. அதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5880 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

corona,india,affected ,கொரோனா ,இந்தியா,பாதிப்பு

அதன்படி ஒரே நாளில் 6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பால் நாட்டில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 35,199ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தினமும் கொரோனாவின் பாதிக்கப்படுவோர் 6.91 சதவிகிதமாகவும்,

அதனை தொடர்ந்து வாராந்திர கொரோனா பாதிப்பு 3.67 சதவிகிதமாக இருக்கிறது. மேலும் கொரோனாவிலிருந்து மக்கள் பாதுகாக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|