Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தினமும் நஷ்டம்... வேலையை விட்டு போங்க... எலான் மஸ்க் அதிரடி

தினமும் நஷ்டம்... வேலையை விட்டு போங்க... எலான் மஸ்க் அதிரடி

By: Nagaraj Sun, 06 Nov 2022 11:22:27 AM

தினமும் நஷ்டம்... வேலையை விட்டு போங்க... எலான் மஸ்க் அதிரடி

நியூயார்க்: வேற வழியே இல்லை. வேலையை விட்டு போங்க... 'தினமும் ரூ.30 கோடி நஷ்டமாகிக் கொண்டிருக்கும் போது, ஊழியர்களை பணிநீக்கம் செய்வதைத் தவிர வேற வழியே இல்லை' என டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தனது நடவடிக்கை நியாயப்படுத்தி உள்ளார்.


டிவிட்டர் சமூக ஊடகத்தை உலகின் நம்பர்-1 எலான் மஸ்க் சமீபத்தில் ரூ.3.62 லட்சம் கோடி விலை கொடுத்து வாங்கினார். டிவிட்டரை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நடத்த மாட்டேன் என முதலில் கூறிய அவர் அடுத்த சில தினங்களிலேயே அதற்கு எதிர்மாறான நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக, உலகம் முழுவதும் டிவிட்டரில் பணியாற்றும் 7,500 பணியாளர்களில் 50 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளார்.

நேற்று முன்தினம் டிவிட்டர் ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு இமெயில் மூலம் பணிநீக்க உத்தரவு அனுப்பப்பட்டது. 3,738 பேரை ஒரே நாளில் டிவிட்டர் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.

employees,2 months,twitter,firing,lawsuit,elon musk ,ஊழியர்கள், 2 மாதம், டுவிட்டர், பணிநீக்கம், வழக்கு, எலான் மஸ்க்

இது குறித்து எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில், ''இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை துரதிஷ்டவசமானது. ஆனால், வேறு வழியில்லை. தினமும் டிவிட்டரில் ரூ.30 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த 2ம் காலண்டில் நிறுவனம் ரூ.2000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதுவே ஒரு ஆண்டிற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ.550 கோடி லாபம் ஈட்டி உள்ளது.

நஷ்டத்தால்தான் பணிநீக்கம் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு இழப்பீடாக 3 மாத சம்பளம் வழங்கப்படும். இது சட்டப்படி தர வேண்டிய தொகையை விட 50 சதவீதம் அதிகம் என்பதால் பல ஊழியர்கள் சந்தோஷப்படுகின்றனர்'' என்றார்.

இதற்கிடையே, அமெரிக்க தொழிலாளர் சட்டப்படி 50 சதவீத பணியாளர்களை ஒரு நிறுவனம் பணியில் இருந்து நிறுத்த வேண்டுமெனில் 2 மாதத்திற்கு முன்பாக நோட்டீஸ் தர வேண்டும். இதை மீறியதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

Tags :
|