Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குஜராத் தலைநகர் காந்திநகரில் நடந்த பால் தொழில் மாநாடு

குஜராத் தலைநகர் காந்திநகரில் நடந்த பால் தொழில் மாநாடு

By: Nagaraj Mon, 20 Mar 2023 8:34:24 PM

குஜராத் தலைநகர் காந்திநகரில் நடந்த பால் தொழில் மாநாடு

காந்திநகர்: பால் தொழில் மாநாடு... இந்திய பால் சங்கம் (ஐடிஏ) 49வது பால் தொழில் மாநாட்டை குஜராத் தலைநகர் காந்திநகரில் நடத்தியது.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்ச்சியின் இறுதி நாளில் ‘உலகிற்கு இந்தியாவின் பால்வளம்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் பேசினார்.

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர்என்ற அந்தஸ்தோடு மட்டும் இந்தியா இருந்துவிடக் கூடாது. இந்தியாவை உலகின் மிகப்பெரிய பால் பொருட்கள் ஏற்றுமதியாளராக மாற்றுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் பால்பண்ணைத் துறை கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுக்கு 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தை ஊக்குவிப்போம். நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஊராட்சிகளில் கிராமப்புற பால்பண்ணைகள் அமைக்க கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து செயல்படும். இதனால், பால் உற்பத்தித் துறையின் வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதத்தில் இருந்து 13.80 சதவீதமாக உயரும்.

export,milk,production, ,இந்திய பால் சங்கம், இந்தியாவின் பங்கு, பால் உற்பத்தி

கிராம அளவில் புதிய பால் சங்கங்கள் அமைக்கப்பட்ட பிறகு, உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 33 சதவீதத்தை எட்டும். நமது பால் பொருட்கள் ஏற்றுமதி தற்போதைய அளவை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும். 2033-34ல் இந்தியாவின் பால் உற்பத்தி ஆண்டுக்கு 330 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும்.

இந்தியாவின் பால் பதப்படுத்தும் திறன் ஒரு நாளைக்கு 126 மில்லியன் லிட்டர். இது உலகளவில் மிக அதிகமாக உள்ளது. பால் உற்பத்தியில் 22 சதவீதம் பதப்படுத்தப்படுகிறது. பால் பொருட்களின் ஏற்றுமதி விவசாயிகளின் வருமானத்தை மேலும் அதிகரிக்கும்.

பால் பவுடர், வெண்ணெய், நெய் ஏற்றுமதியில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் மற்றும் விவசாய வளர்ச்சியில் கூட்டுறவு பால்பண்ணைகளின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

Tags :
|
|