Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆவின் நிறுவனத்தில் உள்ள காலிபணியிடங்களை TNPSC தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் அறிவிப்பு

ஆவின் நிறுவனத்தில் உள்ள காலிபணியிடங்களை TNPSC தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் அறிவிப்பு

By: vaithegi Mon, 20 June 2022 11:08:43 PM

ஆவின் நிறுவனத்தில் உள்ள காலிபணியிடங்களை TNPSC தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் அறிவிப்பு

தமிழகம் : ஆவின் நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆவின் பாலின் உற்பத்தி விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை சரியான முறையில் நிரப்பாமல் கடந்த ஆட்சியில் பல முறைகேடுகள் நடைபெற்றதால் காலிபணியடங்களை நிரப்பும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இனி வரும் ஆண்டுகளில் ஆவின் நிறுவனத்தில் உள்ள காலிபணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தாலோ அல்லது யாரேனும் தவறுகள் செய்திருப்பின் கண்டிப்பாக அவர்கள் மீது தக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பால்வளத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

dairy,minister,avin ,பால்வளத் துறை,அமைச்சர் ,ஆவின் ,டி.என்.பி.எஸ்.சி

மேலும், ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்கள் தவிர வேறு நிறுவனத்தை சார்ந்த பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளை விட இந்தாண்டு பால் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், ஆவின் பாலகத்தில் நாள் ஒன்றிற்கு மட்டுமே 42 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பாலுக்கான கொள்முதல் விலையையும் வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் உயர்த்த உள்ளதாகவும் முதல்வர் முக ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|