Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆவினில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும் ... பால்வளத்துறை அமைச்சர் நாசர்

ஆவினில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும் ... பால்வளத்துறை அமைச்சர் நாசர்

By: vaithegi Fri, 13 Jan 2023 6:41:38 PM

ஆவினில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும்  ...  பால்வளத்துறை அமைச்சர் நாசர்

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்து, சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களான நெய். பால்பவுடர், பனீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், லஸ்ஸி, யோகர்ட், நறுமணப் பால் வகைகள். இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லேட் மற்றும் குக்கீஸ் வகைகள் நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்து கொண்டு வருகின்றது.

ஆவினில் பல வகையான இனிப்புகள் மற்றும் பால் வகைகளை அறிமுகப்படுத்தியது போன்று, கோடை காலத்தில் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். வியாபார நோக்குடன் அல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில், சேவை நோக்கத்துடன் சிறப்பு இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

dairy minister,bonus , பால்வளத்துறை அமைச்சர்,போனஸ்

இதையடுத்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் 3,200 டன் அளவுக்கு இனிப்புகள் தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஆவினில் குளிர்பானங்களை கொண்டு வரும் திட்டமும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஆவினில் பணிபுரியும் 27,189 பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும்.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் 27,189 பணியாளர்களுக்கு ரூ.2.70 கோடி போனஸ் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags :