Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா , உடுப்பி மாவட்டத்தில் கனமழை... கல்லூரிகளுக்கு விடுமுறை

கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா , உடுப்பி மாவட்டத்தில் கனமழை... கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 30 June 2022 4:10:51 PM

கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா , உடுப்பி மாவட்டத்தில் கனமழை... கல்லூரிகளுக்கு விடுமுறை

கர்நாடகா: கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் தற்போது அம்மாநிலத்தின் சில பகுதிகளில் மோசமான வானிலை நிலவி வருகிறது. அதாவது, தட்சிண கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இக்கனமழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் உள்ள பட்டயக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் நேற்று (ஜூன் 29) இரவு முதல் கனமழை பெய்தது.

heavy rain,holidays ,கனமழை,விடுமுறை

இதற்கிடையில் கனமழைக்கு மத்தியிலும் இன்று (ஜூன் 30) மங்களூரு நகரில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை தந்திருப்பதால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு வகுப்புகளை நடத்துமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கனமழை காரணமாக மங்களூரு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் சாலையின் சிறிய பகுதி ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது தவிர மங்களூருவில் உள்ள பம்ப்வெல் சந்திப்பு, மகாகாளிபாட்பு ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் பிற முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. அதே போல அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :