Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓடிஸ் சூறாவளி புயலால் பாதிப்பு…. பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஓடிஸ் சூறாவளி புயலால் பாதிப்பு…. பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

By: Nagaraj Mon, 30 Oct 2023 11:45:10 AM

ஓடிஸ் சூறாவளி புயலால் பாதிப்பு…. பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

மெக்சிகோ: பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசை... மெக்சிகோ நாட்டின் அகாபுல்கோ பகுதியில் சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக பெட்ரோல் வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு சில நாட்கள் முன்பு வீசிய ஓடிஸ் சூறாவளிப் புயலால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன.

hurricane otis,mexico,gasoline stocks,long line,people ,ஓடிஸ் புயல், மெக்சிகோ, பெட்ரோல் பங்குகள், நீண்ட வரிசை, மக்கள்

சாலைகள் முழுவதும் மழை வெள்ளத்தில் சிக்கி சேதம் அடைந்துள்ளன. ஓடிஸ் புயலால் 260 கிலோ மீட்டர் முதல் 315 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பெட்ரோலுக்கு மக்கள் காத்திருக்கும் நிலை ஏறப்பட்டு உள்ளது. மேலும் இங்குள்ள பல நகரங்களில் இருந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய சம்பவமும் நடந்துள்ளது. அந்தளவிற்கு ஓடிஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|