Advertisement

செம்மணி மயானம் அருகே உலா வரும் ஆபத்தான நரிகள்

By: Nagaraj Fri, 18 Sept 2020 6:03:30 PM

செம்மணி மயானம் அருகே உலா வரும் ஆபத்தான நரிகள்

ஆபத்தான நரிகள்... யாழ்ப்பாணம் - கைதடி ஏ9 வீதியில் இருந்து 50 மீற்றர் தொலைவில் செம்மணி மயானம் அருகே ஒரு வகையான நரிகள் இனங்காணப்பட்டன.

குறித்த நரிகளை இதற்கு முன் கண்டதில்லை என்று தெரியவந்துள்ளது. இவை எங்கிருந்து வந்தன என்பது தெரியவில்லை ஆனால் இந்த நரிகள் மனிதருக்கு ஆபத்தானவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

foxes,cemetery,inhabited by people,demand ,நரிகள், மயானம், மக்கள் வசிக்கும்,  கோரிக்கை

குறித்த வழியாக இரவிலும் பகலிலும் பலர் வந்து செல்வதால் அவர்களுக்கு இந்த நரிகள் ஆபத்தாக இருக்கலாம்.அத்துடன் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களே இவற்றிடமிருந்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகின்றனர்.

இந்த நரிகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதற்குள் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|