Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மே மாதம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் தேதி மாற்றம்

மே மாதம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் தேதி மாற்றம்

By: vaithegi Sat, 29 Apr 2023 3:43:03 PM

மே மாதம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் தேதி மாற்றம்

சென்னை: மதுரை மாவட்ட ரயில்வே கோட்டத்தில் சுரங்கபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே இதன் காரணமாக மே மாதம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் தேதி மாற்றம் .... தமிழகத்தில் விருதுநகர்,வாஞ்சி மணியாச்சி இடையே இயக்கப்படும் ரயில் நிலையங்களில் சுரங்கபாதைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த பணிகளின் காரணமாக அப்பகுதிகளில் செல்லக்கூடிய முக்கிய ரயில்கள் இயக்கப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை, நாகர்கோவில் இடையே காலை 8 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16322) மே-13,14 தேதிகளில் திண்டுக்கல் மாவட்டத்துடன் நிறுத்தப்படும்.

railways,southern districts ,ரயில்வே ,தென் மாவட்டங்கள்

மேலும் வருகிற மே-13,14 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் இருந்து பிற்பகல் 1.23 மணிக்கு ரயில் புறப்படும். அதே போன்று தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு விரைவு ரயில் (20691) இரவு 11 மணிக்கு புறப்படும். மே 2 மற்றும் 16 தேதிகளில் திருச்சியுடன் நிறுத்தப்படும். மாற்றுப்பாதையாக நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு விரைவு ரயில் மே – 3,17 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் திருச்சியுடன் பகுதியாக ரத்து செய்யப்படும்.

அதை தொடர்ந்து பாலக்காடு திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16732/16731) மூலம் தேதிகளில் திண்டுக்கலுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக திண்டுக்கல்லில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும். மேலும் திருச்சி- திருப்புவனம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் மே-3,7வது தேதிகளில் விருதுநகருடன் நிறுத்தப்படும் மாற்று பாதையாக விருதுநகரில் இருந்து மாலை 4:10 க்கு புறப்பட்டு திருச்சி சென்றடையும். இதற்கு அடுத்ததாக கேரளாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் விரைவு ரயில் வருகிற மே-2,16 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி,தென்காசி, விருதுநகர் வழியாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :