Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு

By: vaithegi Sun, 23 July 2023 10:01:36 AM

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு ... இதனை அடுத்து இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக்கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில், 5.4.2023 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 4.5.2023 முதல் பெறப்பட்டு கொண்டு வருகின்றன.

deadline,new member of aiadmk ,காலக்கெடு ,அதிமுகவில் புதிய உறுப்பினர்

இந்த நிலையில், கழகத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக் கெடுவை நீட்டித்துத் தருமாறு மாவட்டக் கழகச் செயலாளர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வருகிற 31.07.2023 மாலை 5 மணிவரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும் இதுவே இறுதி வாய்ப்பாகும். புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, கழகப் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :