Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரோடு இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் காலக்கெடு நிறைவு

ஈரோடு இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் காலக்கெடு நிறைவு

By: Nagaraj Tue, 07 Feb 2023 11:27:28 PM

ஈரோடு இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் காலக்கெடு நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த திரு.ஈவேரா, கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார் .

இதையடுத்து, காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று (பிப்ரவரி 07) பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

completion,erode east by-election,last date of nomination ,ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், நிறைவு, வேட்பு மனு கடைசி தேதி

அதிமுக வேட்பாளர் தென்னரசு, அதிமுக வேட்பாளர் சிவபிரசாந்த், திமுகவின் ஆனந்த் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மற்றும் சுயேச்சைகள் உள்பட 70க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

வேட்புமனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 10 கடைசி நாளாகும். இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்ரவரி 10ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2ம் தேதி நடைபெறும்.

Tags :