Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருமணம் முடிந்த 2-வது நாளில் மணமகன் மரணம்...திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா

திருமணம் முடிந்த 2-வது நாளில் மணமகன் மரணம்...திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா

By: Monisha Wed, 01 July 2020 11:26:35 AM

திருமணம் முடிந்த 2-வது நாளில் மணமகன் மரணம்...திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா

பீகாரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் மணமகன் மரணம் அடைந்ததுள்ளார். திருமணத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல் வருமாறு:-

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் 30 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஜூன் 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் மணமகன் திடீரென மரணம் அடைந்தார். இதனை அடுத்து அவருக்கு கொரோனா சோதனை செய்யாமலேயே உறவினர்கள் உடலை தகனம் செய்துவிட்டனர்.

இதனை அடுத்து இந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஒருசிலருக்கு அடுத்தடுத்து திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பீகார் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சோதனை செய்தனர். அப்போது 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். எனவே மணமகணும் கொரோனா பாதிப்பில் தான் உயிரிழந்திருப்பார் என்று கூறப்படுகிறது.

marriage,corona virus,death,bridegroom,corona test ,திருமணம்,கொரோனா வைரஸ்,மரணம்,மணமகன்,கொரோனா சோதனை

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்:- திருமணத்திற்காக மணமகன் சாப்ட்வேர் இஞ்சினியர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போதே அவருக்கு கொரனோ வைரஸ் அறிகுறி இருந்துள்ளது. ஆனால் அதனை மறைத்து மணமகன் வீட்டார் திருமணத்தை முடித்துள்ளனர். திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மேலும், கொரோனாவால் உயிரிழந்தும் இந்த விஷயத்தை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அவருடைய உறவினர்கள் உடலை தகனம் செய்து விட்டனர். மேலும் திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் மணமகன் வீட்டார்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மணமகளுக்கு செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|