Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்... டிஜிபியிடம் புகார்

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்... டிஜிபியிடம் புகார்

By: Nagaraj Sat, 25 June 2022 11:28:08 PM

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்... டிஜிபியிடம் புகார்

சென்னை: டிஜிபியிடம் புகார்... முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதிமுக இரண்டு அணியாகப் பிளவுபட்டு ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக இருக்கிறது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், தீர்மான குழுவால் கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக சிவி சண்முகம் ஆவேசமாகக் கூறினார். அதோடு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த சூழலில் முன்னாள் அமைச்சருக்குக் கொலை மிரட்டல் வருவதாகத் தமிழக டிஜிபியிடம் சிவி சண்முகத்தின் ஆதரவாளரும் வழக்கறிஞருமான பாலமுருகன் புகார் அளித்துள்ளார்.

அதில், ராஜ்யசபா உறுப்பினர், முன்னாள் சட்டத் துறை அமைச்சர், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மற்றும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரான சிவி சண்முகத்தின் அரசியல் செயல்பாட்டால் எரிச்சலடைந்தவர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட எண்ணிலிருந்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

police,complaint,dgp,former minister,death threat ,போலீசார், புகார், டிஜிபி, முன்னாள் அமைச்சர், கொலை மிரட்டல்

அலைபேசி வாயிலாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் மிரட்டல் வருகிறது. இதுவரை 100 முறைக்கு மேல் கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, சி.வி.சண்முகத்துக்குத் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பாலமுருகன், “தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து புகார் மனு கொடுத்திருக்கிறோம். ஏற்கனவே 2021 ஜூன் மாதம் இது போன்று கொலை மிரட்டல்கள் வந்தது. அப்போது ரோசனை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

இந்த சூழலில் அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. அவரது தலையை வெட்டி தொங்க விடுவதாக வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் அனுப்புகின்றனர்.

இன்று நாங்கள் அளித்த புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட டிஜிபி சென்னை ஆணையர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார் என்று கூறியுள்ளார். யார் தூண்டுதலின் பெயரில் மிரட்டல் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. மெசேஜ் வந்த எண்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம்” என்றார்.

Tags :
|
|