Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவை புரட்டி போட்ட புயல் .. பலி எண்ணிக்கை 32-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவை புரட்டி போட்ட புயல் .. பலி எண்ணிக்கை 32-ஆக அதிகரிப்பு

By: vaithegi Mon, 03 Apr 2023 12:22:54 PM

அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்  .. பலி எண்ணிக்கை 32-ஆக அதிகரிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே 60 புயல்கள் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய, மேற்கு அமெரிக்காவில் உள்ள 8 மாகாணங்களை தாக்கிய இந்த புயலால் பல வீடுகள் மற்றும் மால்கள் சிக்கி சேதமடைந்தது.

அந்த வகையில் முதற்கட்ட தகவலின் படி, இந்த புயலால் குறைந்தது 21- பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டு இருந்தது.

bali,usa,storm ,பலி ,அமெரிக்கா,புயல்

இதனையடுத்து, இல்லினாய்ஸ், ஆர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் மேலும் பல உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டதை தொடர்ந்து, தற்போது பலி எண்ணிக்கை 32 – ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த புயலில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இதுபோன்ற புயல்கள் வருகிற 10-ஆம் தேதி வரை தாக்கலாம் எனவும், எனவே இதன் காரணமாக மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும், அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளது.

Tags :
|
|