Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே விவாதம்

அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே விவாதம்

By: Karunakaran Thu, 08 Oct 2020 3:03:04 PM

அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே விவாதம்

அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு டிரம்ப் கட்சி சார்பில் மைக் பென்ஸ், ஜோ பிடன் கட்சியில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வேட்பாளர்களுக்கான நேருக்கு நேர் விவாதம் தொடங்கி உள்ளது. கடந்த மாத இறுதியில் அதிபர் வேட்பாளர்கள் டிரம்ப்-ஜோ பிடன் நேரடி விவாதத்தில் பங்கேற்று தங்கள் சாதனைகள், திட்டங்களை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு கேட்டனர். துணை அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான நேருக்கு நேர் விவாதம் இன்று நடைபெற்றது. ஜோ பிடன் கட்சியின் கமலா ஹாரிஸ், டிரம்ப் கட்சியின் மைக் பென்ஸ் ஆகியோர் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டனர்.

debate,vice president,united states,kamala harris ,விவாதம், துணைத் தலைவர், அமெரிக்கா, கமலா ஹாரிஸ்

டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான செயல்திட்டம் இல்லை என கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். கொரோனா உயிரிழப்புகளை குறைத்துள்ளதாக மைக் பென்ஸ் பதிலடி கொடுத்தார். டிரம்ப் அரசின் மோசமான முடிவுகளால் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இதனை மறுத்த பென்ஸ், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக விளக்கம் அளித்தார்.

ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் வரிச்சலுகைகளை பறித்துவிடுவார் என பென்ஸ் கூறினார். இதற்கு பதிலளித்த கமலா, நீதிபதி நியமனத்தில் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளார்களா? என்றார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். நாட்டின் பாதுகாப்பே டிரம்பிற்கு முதன்மையானது என பென்ஸ் தெரிவித்தார். டிரம்ப்-பென்ஸ் நிர்வாகம் அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு வசதியாக இருப்பதாகவும், வெளிநாடுகளில் நேட்டோ நட்பு நாடுகளின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாகவும் ஹாரிஸ் குற்றம் சாட்டினார்.

Tags :
|