Advertisement

சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடக்கம்

By: vaithegi Thu, 23 Mar 2023 09:53:47 AM

சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடக்கம்


சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 20-ம் தேதி 2023 -24-ம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோன்று, கடந்த 21-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று தொடங்குகிறது. அதன்படி இன்று காலை பேரவை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கற்குறிப்புகள், இரங்கல் தீர்மானத்தை வாசிப்பார்.

budget,legislature ,பட்ஜெட் ,சட்டப்பேரவை


அதன்பிறகு உறுப்பினர்கள் சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்துவர். அதையடுத்து சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்குகிறது. பேரவை தொடங்கியதும் வழக்கமாக கேள்விநேரம் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், இன்று கேள்வி நேரம் இல்லை எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதற்கு பதிலாக நேரமில்லா நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு பொதுமக்கள் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இன்று மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

நேரமில்லா நேரத்தை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. தொடர்ந்து நாளையும் , திங்கள் கிழமையும் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. பின்னர் 28-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுவார்.

இதனை அடுத்து 25 மற்றும் 26-ம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து 29-ந்தேதி முதல் தொடங்கி, 21-ம் தேதி வரை மானியக்கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்க இருக்கிறது. 29-ம் தேதி முதல் மானியக்கோரிக்கையாக காலையில், நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையும், மாலையில் போக்குவரத்து துறையும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Tags :
|