Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானுக்கு கடன், கச்சா எண்ணெய் இல்லை; அதிரடித்தது சவுதி

பாகிஸ்தானுக்கு கடன், கச்சா எண்ணெய் இல்லை; அதிரடித்தது சவுதி

By: Nagaraj Thu, 13 Aug 2020 3:41:07 PM

பாகிஸ்தானுக்கு கடன், கச்சா எண்ணெய் இல்லை; அதிரடித்தது சவுதி

அதிரடி முடிவு.... பாகிஸ்தானுக்கு கடன் மற்றும் கச்சா எண்ணெய் வழங்கப்படாது என்று சவுதி அரேபியா அதிரடியாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அமைச்சரின் எச்சரிக்கை விடுக்கும் பேச்சுதான் இந்த முடிவுக்கு காரணம் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது சட்டப்பிரிவை இந்தியா நீக்கியதற்கு எதிராக, சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவை பெறும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்தது.

இதையடுத்து சவுதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகுமது குரேஷி கருத்து தெரிவித்திருந்தார்.

friendship decision,pakistan,saudi arabia,$ 320 crore ,நட்புறவு முடிவு, பாகிஸ்தான், சவுதி அரேபியா, 320 கோடி டாலர்

அதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்த 300 கோடி டாலர் கடனுதவி மற்றும் 320 கோடி டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் வினியோகத்தை நிறுத்துவதாக சவுதி அரேபியா அதிரடியாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே அளித்த 100 கோடி டாலரையும் திருப்பி அளிக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பல ஆண்டு கால நட்புறவு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags :