Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் மற்றும் புதுவையில் வரும் டிச. 20ம் தேதி வரை மழை பெய்யும் ... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் டிச. 20ம் தேதி வரை மழை பெய்யும் ... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Fri, 16 Dec 2022 7:49:37 PM

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் டிச. 20ம் தேதி வரை மழை பெய்யும்    ...  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 18ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதே போன்று டிசம்பர் 19ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள்‌, புதுவை உள்ளிட்ட பகுதிகளில்‌ அநேக இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதனை தொடர்ந்து டிசம்பர் 20 அன்று தமிழகத்தின் இராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌ ஆகிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai meteorological center,rain ,சென்னை வானிலை ஆய்வு மையம் ,மழை

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகள்‌ & தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ காலை வரை வீசக்கூடும்‌.

இதனை அடுத்து அதே போன்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென் மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில் 20ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ காலை வரை வீசக்கூடும்‌. அதனால் மீனவர்கள் இப்பதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :