Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இணையதளம் வழியாக மது விற்க முடிவு

ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இணையதளம் வழியாக மது விற்க முடிவு

By: Nagaraj Mon, 28 Dec 2020 8:41:08 PM

ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இணையதளம் வழியாக மது விற்க முடிவு

இணைய தளம் வாயிலாக மது விற்பனை... இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இணையதளம் மூலமாக மதுபானம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

internet,liquor sales,military veterans,results ,இணையம், மது விற்பனை, ராணுவ வீரர்கள், முடிவு

இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு கேண்டின் மூலம் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதனையடுத்து சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்தோ திபெத் எல்லைக் காவல் படை வீரர்களுக்கு இணையதளம் மூலம் மதுபானம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான இணையதளத்தை இந்தோ திபெத் காவல் படை காவலர் தேஸ்வால் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி வீரர்கள் இணையத்தளத்தில் கணக்கு தொடங்கி, மாதம் 6 பீர் மற்றும் 8 பாட்டில் மது பானங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Tags :