Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு; அமைச்சர் சொல்கிறார்

பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு; அமைச்சர் சொல்கிறார்

By: Nagaraj Sun, 24 May 2020 10:55:22 AM

பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு; அமைச்சர் சொல்கிறார்

மே மாதம் நிறைவு பெற உள்ள நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் கொரோனா அச்சத்தால் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவார்களா என்பதும் சந்தேக நிலையாக உள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி பற்றி பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


parents,schools opening,minister of education,private school,complaints ,
பெற்றோர்கள், பள்ளிகள் திறப்பு, கல்வித்துறை அமைச்சர், தனியார் பள்ளி, புகார்கள்

ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரப்பூர்வமாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார்கள் பல வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி குறித்து அறிவிக்கப்படும். அதன்பின், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :