Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் கொரோனா வைரஸ் பரிசோதனையை விரைவுபடுத்த அனைத்துக்கட்சி கூடத்தில் முடிவு

டெல்லியில் கொரோனா வைரஸ் பரிசோதனையை விரைவுபடுத்த அனைத்துக்கட்சி கூடத்தில் முடிவு

By: Monisha Mon, 15 June 2020 5:44:42 PM

டெல்லியில் கொரோனா வைரஸ் பரிசோதனையை விரைவுபடுத்த அனைத்துக்கட்சி கூடத்தில் முடிவு

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 41 ஆயிரத்து 182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1327 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஜூலை இறுதிக்குள் ஐந்து லட்சத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, டெல்லி அரசு கொரோனா வைரஸ் பரிசோதனையை விரைவுபடுத்தி ஜூன் 20ம் தேதிக்குள் ஒரு நாளைக்கு 18,000 சோதனைகளை நடத்த தொடங்கும் என அமித் ஷா கூறி உள்ளார்.

india,delhi,corona virus,amit shah,all party leaders ,இந்தியா,டெல்லி,கொரோனா வைரஸ்,அமித் ஷா,அனைத்துக்கட்சி தலைவர்கள்

இக்கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குமார் குப்தா கூறியதாவது:- பரிசோதனை கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும் என்ற பாஜவின் கோரிக்கையை உள்துறை மந்திரி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக ஒரு கமிட்டியை உள்துறை மந்திரி அமைத்துள்ளார். 2 நாட்களுக்குள் அந்த கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையின் அடிப்படையில் பரிசோதனை கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு ஆதேஷ் குமார் குப்தா கூறினார்.

Tags :
|
|