Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புகையிலைப் பொருள்களுக்கான தடையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு

புகையிலைப் பொருள்களுக்கான தடையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு

By: Nagaraj Sat, 28 Jan 2023 09:45:12 AM

புகையிலைப் பொருள்களுக்கான தடையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு

சென்னை: மேல் முறையீடு செய்கிறது தமிழக அரசு... குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கான தடையை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டவிரோத குட்கா, பான்மசாலா விற்பனையாளா்கள், மொத்த வியாபாரிகள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் இது தொடா்பாக அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டு, தடை உத்தரவை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த சட்ட நடவடிக்கையை எதிா்த்து பல நிறுவனங்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தன. தற்போது, இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு, அதன் தீா்ப்பில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், குட்கா, பான் மசாலாவுக்கு உணவு பாதுகாப்பு ஆணையா் விதித்த தடையை ரத்து செய்துள்ளது.

appellate,legal expert,review,supreme court,tamil nadu govt ,மேல் முறையீடு, சட்ட வல்லுநர், ஆய்வு, உச்சநீதி மன்றம், தமிழக அரசு

நாடு முழுவதும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு ஆணையா்கள் உரிய விதிமுறையின் கீழ்தான் தடை உத்தரவை பிறப்பித்து வருகின்றனா். இந்தியா முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவை இந்தியாவிலும், தமிழகத்திலும் வாய் புற்றுநோய்க்கான முதன்மையான காரணமாக உள்ளன.

எனவே, உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சட்ட நிபுணா்களுடன் கலந்தாலோசித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் தடையை நீட்டிப்பதை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள சட்டம், விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதா என்பதையும் சட்ட வல்லுநா்களுடன் ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|