Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய முடிவு

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய முடிவு

By: vaithegi Fri, 19 Aug 2022 9:01:49 PM

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய முடிவு

சென்னை : தமிழகத்தில் எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தற்கொலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் இதில் பலர் எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி தான் தற்கொலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

rat paste,dung powder,suicide ,எலி பேஸ்ட் ,சாண பவுடர் ,தற்கொலை

எனவே இதனை அடுத்து தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த எலி பேஸ்ட் சாப்பிட்டால், அந்த பேஸ்ட் குடலில் ஒட்டிக்கொண்டு, ரத்தத்தில் கலப்பதால், கல்லீரல் முழுவதுமாக செயலிழந்து, ரத்தம் உறையும் தன்மை இல்லாமலேயே போய்விடுகிறது.

மேலும் ரத்தம் உறையாமை நிலை ஏற்படுவதால், மூளை மற்றும் நுரையீரலில், உள்ளுக்குள்ளேயே ரத்தம் கசிய ஆரம்பித்து இறந்து விடுகின்றனர்.

Tags :