Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு

ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு

By: Nagaraj Mon, 27 June 2022 11:40:45 PM

ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு

ஜெர்மனி: ஜி-7 நாடுகள் முடிவு.. .உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட ஜி-7 நாடுகள் முடிவு செய்துள்ளன.

உலகளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ள கூட்டமைப்புதான் ஜி-7.

இந்நிலையில் 48வது ஜி-7 மாநாடு ஜெர்மனியில் உள்ள ஸ்குலோஸ் எல்மாவ் என்ற இடத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

g7 countries,exports,russia,embargo,decision ,ஜி 7 நாடுகள், ஏற்றுமதி, ரஷ்யால, தடை விதிப்பு, முடிவு

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், ஜி-7 மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

இதன் முதல் கட்டமாக, ரஷ்யாவின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருட்களில் ஒன்றாக உள்ள தங்கத்தின் இறக்குமதிக்கும் மேற்கு நாடுகள் தடை விதிக்க உள்ளன. நேற்று ஜி-7 மாநாடு தொடங்கும் முன்பாக அமெரிக்க அதிபர் பைடன் இதை தெரிவித்தார். முதல் கட்டமாக, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா ஆகியவை இந்த தடையை விதித்துள்ளன.

அவற்றினை பின்பற்றி ஜெர்மனியும், இதர ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் தங்கத்துக்கு தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை கச்சா எண்ணெய், எரிவாயுக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு பல லட்சம் கோடிக்கு தங்கம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|