Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு

By: Nagaraj Wed, 24 May 2023 11:28:37 AM

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு

புதுடில்லி: எதிர்கட்சிகள் முடிவு... புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்க பல்வேறு எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28ந் தேதியன்று பிரதமர் மோடி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விவாதித்தாகத் கூறப்படுகிறது.

ceremony,boycott,new parliament,building,opposition ,விழா, புறக்கணிப்பு, புதிய நாடாளுமன்றம், கட்டிடம், எதிர்கட்சிகள்

இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. திறப்பு விழா அழைப்பு கிடைத்தபின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என சில கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் விழாவைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :