Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா நெறிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு

கொரோனா நெறிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு

By: Nagaraj Thu, 03 Sept 2020 1:18:57 PM

கொரோனா நெறிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு

அபராதம் விதிக்க முடிவு... பொது இடங்களில் முக கவசம் அணிதல், தனி நபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, பொது சுகாதாரம் 1939 என்ற சட்டத்தில், புதிய திருத்தங்களை இணைத்துள்ள தமிழக அரசு, இதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தபின், விதிகளை மீறுவோருக்கு எந்த மாதிரியான அபராதம் விதிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தமிழக அரசு வெளியிடும்.

penalty,amendment,charge,regulation,government of tamil nadu ,அபராதம், சட்டதிருத்தம், குற்றச்சாட்டு, விதிமுறை, தமிழக அரசு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 516 ஆக அதிகரித்தது. வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அரசின் விதிமுறைகளை பல பகுதிகளிலும் மக்கள் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Tags :
|