Advertisement

இந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் வேகத்தை அதிகரிக்க முடிவு

By: vaithegi Mon, 17 Oct 2022 9:21:00 PM

இந்த   எக்ஸ்பிரஸ் ரயில்களில் வேகத்தை அதிகரிக்க முடிவு

சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேரங்களில் ரயில் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு கடந்த 1977ம் ஆண்டு சென்னைக்கு பகல் நேர ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து அப்போது மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்று இந்தியாவின் அதிவிரைவு ரயில் என்ற பெருமையை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது வைகை எக்ஸ்பிரஸ் மதுரை டூ சென்னை இடையேயான 497 கி.மீ. தூரத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 6 மணி 34 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

express,vaigai ,எக்ஸ்பிரஸ் ,வைகை

இதையடுத்து இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் மதுரையில் இருந்து இயக்கப்படும் வைகை மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வேகத்தை 110 கீ.மீ இருந்து 130 கீ.மீ ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த முடிவு ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இனி வரும் நாட்களில் மதுரையில் இருந்து சென்னைக்கு இன்னும் வேகமாக பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :