Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு

இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு

By: vaithegi Wed, 11 Oct 2023 2:50:34 PM

இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு


சென்னை: தமிழகத்தில் மதுபான கடைகள் தொடர்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் இடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் 500 மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில் அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிக்கட்டும் வகையில் அனைத்து மதுபானங்களின் விலையும் ரூ. 10 முதல் ரூ. 50 வரையிலும் அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு மதுபான கடைகள் மூலமாக வரும் வருவாயை பெருக்கும் நோக்கில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

foreign liquor,liquor stores ,வெளிநாட்டு மதுபானம், மதுபான கடைகள்

அதாவது, இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை சாதாரண வகைகளுக்கு லிட்டருக்கு ரூ. 250 முதல் ரூ. 500 வரையில் அதிகரிக்கப்படும் என்றும், நடுத்தர வகைகளுக்கு லிட்டருக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரையிலும் அதிகரிக்கப்படும் என்றும்,

மேலும் உயர்தர வகைகளுக்கு லிட்டருக்கு ரூ. 500 லிருந்து ரூ. 1000 வரையிலும் அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே , இதற்காக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப் பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்கான மசோதா அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Tags :