Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் விடுமுறை – 20,000 பேர் முன்பதிவு ..சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு

தொடர் விடுமுறை – 20,000 பேர் முன்பதிவு ..சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு

By: vaithegi Tue, 26 Sept 2023 5:18:53 PM

தொடர் விடுமுறை – 20,000 பேர் முன்பதிவு ..சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு


சென்னை: 1500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிடல் .. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் செப். 28ஆம் தேதி மிலாடி நபி, பிறகு செப். 30 அக்.01 (சனி, ஞாயிறு) வழக்கமான வார விடுமுறை அக்.02 காந்தி ஜெயந்தி என்று தொடர்ச்சியாக விடுமுறை வந்துள்ளது.

எனவே இதனை கருத்தில் கொண்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். சென்னையிலிருந்து வெளியூருக்கு பயணிக்க நாளை மட்டும் சுமார் 20,000 பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

special bus,reservation,serial holiday ,சிறப்பு பேருந்து,முன்பதிவு , தொடர் விடுமுறை

அதை த் தொடர்ந்து செப்டம்பர் 28,29 ஆகிய தேதிகளில் 40,000 பேர் வரை முன்பதிவு செய்துள்ளனர். பேருந்தில் பயணிக்கும் நபர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ள நிலையில் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டு உள்ளது.

அதாவது செப்டம்பர் 27, 28, 29 30 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து கூடுதலாக 1500 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை பெறுவதற்கு கூடுதலாக 1000 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :