Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தது போக்குகாட்டும் வேலை - சீதாராம் யெச்சூரி

ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தது போக்குகாட்டும் வேலை - சீதாராம் யெச்சூரி

By: Karunakaran Thu, 02 July 2020 12:07:42 PM

ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தது போக்குகாட்டும் வேலை - சீதாராம் யெச்சூரி

கொரோனா பாதிப்பு காரணமாக நவம்பர் மாதம் வரை ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகையில் கூறினார். இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், நவம்பர் மாதம் வரை ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது மற்றொரு போக்குகாட்டும் வேலை எனவும், புதிதாக அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

sitaram yechury,ration products,modi,poor peoples ,சீதாராம் யெச்சூரி, ரேஷன் பொருட்கள், மோடி, ஏழை மக்கள்

மேலும், கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, 14 கோடி விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று மோடி கூறினார். தற்போது, 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மீதமுள்ள 5 கோடி விவசாயிகளின் நிலைமை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் மாதம் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், தலா 10 கிலோ வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மாதமும் அவர்களுடைய வங்கி கணக்கில் தலா ரூ.7,500 செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் 14 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்தது பற்றி பிரதமர் உரையில் எதுவும் குறிப்பிடவில்லை என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Tags :
|