Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து நடை அடைப்பு

சபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து நடை அடைப்பு

By: Nagaraj Tue, 02 June 2020 4:09:06 PM

சபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து நடை அடைப்பு

பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு 7:30 மணிக்கு அடைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி நடை திறந்தார். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மூலவருக்கு அபிேஷகம் செய்தார். தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து களப கலசத்தை மேல்சாந்தி எடுத்து கோயிலை வலம் வந்தார். களப அபிேஷகம் முடிந்து உச்சபூஜைக்குப் பின் நடை அடைக்கப்பட்டது.

walking block,animated pooja,peak pooja,anointing ,நடை அடைப்பு, ஆனிமாத பூஜை, உச்ச பூஜை, அபிஷேகம்

மாலை 5 மணிக்கு நடை திறந்து 6:30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு அத்தாழபூஜையும் நடைபெற்றன. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அடுத்து ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 14 மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கிறது.

Tags :