Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையில் கல்லீரல் செயல் இழப்பு பிரத்யேக சிகிச்சை மையம் தொடக்கம்

கோவையில் கல்லீரல் செயல் இழப்பு பிரத்யேக சிகிச்சை மையம் தொடக்கம்

By: Nagaraj Tue, 18 Apr 2023 8:55:53 PM

கோவையில் கல்லீரல் செயல் இழப்பு பிரத்யேக சிகிச்சை மையம் தொடக்கம்

கோவை: பிரத்யேக சிகிச்சை மையம் தொடக்கம்... கோவையில் துவங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் குறிப்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

கல்லீரல் செயல் இழப்பு என்பது இந்தியாவில் நிகழும் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.குறிப்பாக இளம் தற்கொலையினால் உயிர் இழக்கும் பெரும்பாலோனோர் விஷம் அருந்தியே உயிரிழக்கின்றனர்.இதற்கு முக்கிய காரணமாக விஷம் அருந்தியவுடன் ஏற்படும் கல்லீரல் பாதிப்பையே மருத்துவர்கள் காரணமாக கூறுகின்றனர்..

இந்நிலையில் மேற்கு தமிழகத்திலேயே முதன் முறையாக கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகத்தி்ல், கல்லீரல் தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துவது,மற்றும் மாற்று கல்லீரல் தேவைப்படும் நோயாளிகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது,

 ,காப்பாற்றும், பேருதவி, சவால், பிரச்சினைகள், கொரோனா, காலக்கட்டம்

இதற்கான துவக்க விழா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நல்லா.ஜி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், பிரத்யேக கல்லீரல் செயல் இழப்பு பிரிவை தமிழக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துவக்கிவைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிறிய அளவிலான பிரச்னைகளுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர்,இதில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயல்பவர்களை காப்பாற்றுவதில் பெரும் சவாலாக உள்ள கல்லீரல் சிகிச்சையில், கோவையில் துவங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் குறிப்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags :