Advertisement

கன்னியாகுமரியில் தீடீர் கடல் சீற்றம்..

By: Monisha Sat, 02 July 2022 7:52:20 PM

கன்னியாகுமரியில் தீடீர் கடல் சீற்றம்..

தமிழ்நாடு: இன்று இரண்டாவது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூர் சிலை பாறை அமைந்துள்ள வங்கக்கடல் பகுதியில் கடல்நீர் மட்டம் தீடீர் என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
அதே நேரம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு, மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் , கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

இதன் காரணமாக இன்று துவங்க வேண்டிய கடல் போக்குவரத்து நீண்ட நேரம் ஆகியும் தொடங்கபடவில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்து இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிக் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றவாறு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூர் சிலையை பார்த்து ரசித்ததோடு தங்களது செல்போன்களில் புகைப்படம், செல்பி எடுத்து சென்றனர்.

kanniyakumari,sea,wait,deep ,விவேகானந்தர் ,நினைவு,கடல்நீர்,போக்குவரத்து,

எனினும் கடல் சீற்றம் குறையும் பட்சத்தில் படகு போக்குவரத்து துவங்க படும் என தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில் சில இடங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இன்றும் கடலுக்கும் மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண காத்திருந்து இருந்தனர்.

Tags :
|
|