Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யாரும் கண்டிராத ஆக்டோபஸ்களின் இனப்பெருக்க இடத்தை கண்டறிந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள்

யாரும் கண்டிராத ஆக்டோபஸ்களின் இனப்பெருக்க இடத்தை கண்டறிந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள்

By: Nagaraj Mon, 03 July 2023 4:10:15 PM

யாரும் கண்டிராத ஆக்டோபஸ்களின் இனப்பெருக்க இடத்தை கண்டறிந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள்

நியூயார்க்: அதிசய கண்டுபிடிப்பு... பசிபிக் பெருங்கடலில் இதுவரை யாரும் கண்டிராத ஆக்டோபஸ்களின் இனப்பெருக்க இடத்தை சர்வதேச ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடலின் கோஸ்டாரிகா கடல் பகுதியில் 3 வாரங்களாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த ஆராய்ச்சியாளர்கள், கடலின் மேற்பரப்பலிருந்து 2 மைல் ஆழத்தில் ஆக்டோபஸ்களின் இனப்பெருக்க இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

cool,hot,octopuses,breeding,researchers ,குளிர்ச்சி, வெப்பமானது, ஆக்டோபஸ்கள், இனப்பெருக்கம், ஆராய்ச்சியாளர்கள்

2013-ம் ஆண்டு இதே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் போது, தாய் ஆக்டோபஸ்கள் தங்கள் முட்டைகளை பாதுகாக்க இங்கு கூடியதை பார்த்ததாகவும், ஆனால் இந்த அளவுக்கு இப்பகுதியில் இனப்பெருக்கும் நடைபெறும் என்று நினைக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் குளிர்ச்சியான இடங்களிலேயே ஆக்டோபஸ்கள் இனப்பெருக்கம் செய்யும் என்றும், ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம், சற்று வெப்பமானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Tags :
|
|