Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாதுகாப்புத்துறை இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல்

பாதுகாப்புத்துறை இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல்

By: Nagaraj Sat, 18 Nov 2023 6:11:42 PM

பாதுகாப்புத்துறை இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல்

ரஷ்யா: ஒப்புதல் வழங்கியது... ரஷியாவில் பாதுகாப்புத் துறைக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய பட்ஜெட்டுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இதுகுறித்து நாடாளுமன்ற அவைத் தலைவா் வியாசெஸ்லவ் வோலோடின் கூறியதாவது:

ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் அறிவித்துள்ள சுமார் 17,500 பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும், ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காகவும் 2024-26 சிறப்பு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில், பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். இது, ராணுவத்துக்கான அதிகபட்ச நிதி ஒதுக்கீடாகும்.

jobs,funding,russia,financing,long-term,experts ,வேலைவாய்ப்புகள், நிதி ஒதுக்கீடு, ரஷ்யா, நிதியளிப்பது, நீண்டகாலம், நிபுணர்கள்

இந்த பட்ஜெட்டில் ஓய்வூதியக் குறைப்பு போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராக ரஷிய கம்யூனிஸ்ட் கட்சி வாக்களித்தது.

தற்போதைய நிலையை சமாளிக்க வேலைவாய்ப்புகளைக் குறைப்பது, குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் நிதியளிப்பது போன்ற உத்திகளை ரஷியா கையாண்டாலும், அது நீண்டகால நோக்கில் எதிா்விளைவை உருவாக்கும் என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

Tags :
|
|