Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 26 ரபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களை பிரான்சிடம் இருந்து வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

26 ரபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களை பிரான்சிடம் இருந்து வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

By: Nagaraj Thu, 13 July 2023 6:41:14 PM

26 ரபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களை பிரான்சிடம் இருந்து வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடில்லி: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்... இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸிடம் இருந்து வாங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், முப்படைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய கடற்படைக்கு ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதற்கான முன்மொழிவு அளிக்கப்பட்டது.

approval,navy,defense,proposal,training aircraft,rafale ,ஒப்புதல், கடற்படை, பாதுகாப்பு, முன்மொழிவு, பயிற்சி விமானங்கள், ரபேல்

இதுகுறித்து ஆலோசனை நடத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ அதிகாரிகள் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த முன்மொழிகள் பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று காலை பிரான்ஸ் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்மொழிவுகளின்படி, இந்திய கடற்படைக்கு 22 ஒற்றை இருக்கை ரஃபேல் விமானங்களும், நான்கு பயிற்சி விமானங்களும் கிடைக்கும். இந்த போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கடற்படை பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|