Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளொன்றுக்கு ஏழு ஏக்கர் காடுகள் அழிப்பு; ஐ.தே.கட்சி பிரதி தலைவர் தகவல்

நாளொன்றுக்கு ஏழு ஏக்கர் காடுகள் அழிப்பு; ஐ.தே.கட்சி பிரதி தலைவர் தகவல்

By: Nagaraj Tue, 29 Sept 2020 5:47:51 PM

நாளொன்றுக்கு ஏழு ஏக்கர் காடுகள் அழிப்பு; ஐ.தே.கட்சி பிரதி தலைவர் தகவல்

நாளொன்றுக்கு ஏழு ஏக்கர் காடுகள் அழிப்பு... புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை நாளொன்றுக்கு ஏழு ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்த ‘சுற்றுச்சூழல் குரல்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இதனை சுற்றுச்சூழல் அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க அனைத்து குடிமக்களும் ஒன்றுபட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ruwan vijayawardena,environment,resolution,deforestation ,ருவான் விஜயவர்தன, சுற்றுச்சூழல், தீர்மானம், காடுகள் அழிப்பு

உலக பாரம்பரிய சிங்கராஜா காடு மற்றும் சுற்றுச்சூழல் அழிவு தொடர்பான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை முழு நாடும் அவதானித்தது.

ஆனால் சுற்றுச்சூழல் அழிவு இப்போது நாட்டில் ஒரு பெரிய தலைப்பாகிவிட்டது என ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

Tags :