Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

By: vaithegi Wed, 04 Oct 2023 09:29:03 AM

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்


சென்னை : இணையதள சேவை பாதிப்பு ... சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்படைந்ததால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

மேலும் ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் பெரும் அவதியடைந்தனர் . துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

flights,chennai airport ,விமானங்கள் ,சென்னை விமான நிலையம்


அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் 9 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது. எனவே இதன்காரணமாக பாங்காக், கொழும்பு, துபாய், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் பயண அட்டை, உடமைகள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :