Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

By: Karunakaran Sat, 05 Dec 2020 5:00:46 PM

டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 10-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் கடந்தமாதம் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், அரியானா - டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 10-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

delhi,uttar pradesh,border tussle,farmers ,டெல்லி, உத்தரபிரதேசம், எல்லை சண்டை, விவசாயிகள்

உத்தரபிரதேச-டெல்லி எல்லையிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய குழுக்கள் இடையே ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்தில் திறுத்தம் கொண்டுவர மத்திய அரசு சம்பதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 விவசாய சட்டங்களையும் திரும்பப்பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லி-உத்தரபிரதேச எல்லையான கிரேட்டர் நொய்டா பகுதியில் யமுனா தேசிய நெடுச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தற்போது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags :
|