Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆம்ஆத்மியை நசுக்க பாஜக முயற்சி... டில்லி முதல்வர் குற்றச்சாட்டு

ஆம்ஆத்மியை நசுக்க பாஜக முயற்சி... டில்லி முதல்வர் குற்றச்சாட்டு

By: Nagaraj Sun, 18 Sept 2022 8:29:49 PM

ஆம்ஆத்மியை நசுக்க பாஜக முயற்சி... டில்லி முதல்வர் குற்றச்சாட்டு

புதுடில்லி: டில்லி முதல்வர் குற்றச்சாட்டு... குஜராத்தில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் ஆம் ஆத்மியை நசுக்க பா.ஜ.,வும் பிரதமர் நரேந்திர மோடியும் முயற்சி செய்வதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் கெஜ்ரிவால் பேசியதாவது: குஜராத்தில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை பா.ஜ.,வால் பொறுக்க முடியவில்லை. இதனால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொய்யான ஊழல் புகார்களை சுமத்துகிறது. தோல்வி பயம் காரணமாக, ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், ஆம் ஆத்மியை நசுக்க பா.ஜ., முயற்சி செய்கிறது.


குஜராத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பதை பொறுத்து கொள்ள முடியாமல், பிரதமரின் ஆலோசகர் ஹிரன் ஜோஷி, டிவி தொலைக்காட்சி அதிபர்களை தொலைபேசியில் அழைத்து, ஆம் ஆத்மி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் மீறினால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

impeachment,assembly,elections,aam aadmi,delhi,cm ,குற்றச்சாட்டு, சட்டசபை, தேர்தல், ஆம் ஆத்மி, டில்லி, முதல்வர்

இந்த மிரட்டல்களை நிறுத்த வேண்டும். ஹிரன் ஜோஷியின் செய்திகளை டிவி அதிபர்கள் வெளியிட்டால், மோடியும், ஹிரன் ஜோஷியும் வெளியில் முகத்தை காட்ட முடியாது. குஜராத்தில் நாங்கள் தான் ஆட்சி அமைக்க போகிறோம். மக்களுக்கு இலவசம் வழங்குவதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடும் என்ற ரீதியில் விமர்சனம் செய்யப்படுகிறது.


நேர்மையற்றவர்கள், ஊழல்வாதிகள் மற்றும் சதிகாரர்கள் தான், இலவசங்கள் நாட்டை சீரழிக்கும் எனக்கூறுவார்கள். இலவசங்கள் நாட்டை சீரழிக்கும் என எந்த அரசியல்வாதி கூறினால், அவரின் நோக்கம் தவறானதாக இருக்கும். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

இதனிடையே, குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இணை பொறுப்பாளராக ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி.,யான ராகவ் சத்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர், டில்லி மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டிருந்தார்.

Tags :
|