Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல டில்லி நீதிமன்றம் அனுமதி

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல டில்லி நீதிமன்றம் அனுமதி

By: Nagaraj Sat, 26 Aug 2023 7:24:00 PM

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல டில்லி நீதிமன்றம் அனுமதி

புதுடில்லி: டில்லி நீதிமன்றம் அனுமதி... காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து செல்ல டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் இருந்து வருகின்றன. மேலும் சிபிஐ, அமலாக்கத்துறை இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றன. இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் 18 முதல் 24 வரை பிரான்ஸ் மற்றும் லண்டன் செல்லவிருப்பதாகவும் அதற்கு அனுமதி கோரியும் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

karti chidambaram,abroad,permit,court,london,deposit ,கார்த்தி சிதம்பரம், வெளிநாடு, அனுமதி, நீதிமன்றம், லண்டன், வைப்புத் தொகை

பிரான்சில் உள்ள செயின்ட் ட்ரோபஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது மற்றும் தன்னுடைய மகளைப் பார்க்க லண்டன் செல்லவிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், செப்டம்பர் 18 முதல் 24 வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளார். இதற்காக எஃப்.டி.ஆர் அல்லது வங்கி வரைவோலை மூலம் ரூ. 1 கோடி பாதுகாப்பு வைப்புத்தொகை வழங்க வேண்டும்.

வெளிநாடு செல்வதற்கு முன்னர் பதிவு செய்வதுடன் வெளிநாட்டில் தங்கவுள்ள இடங்கள் அல்லது ஹோட்டல்களின் விவரங்கள், வெளிநாட்டில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் தொடர்பு எண்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

Tags :
|
|
|
|