Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி என்சிஆர் பகுதியில் அதிகளவு காற்று மாசுபாடு பதிவு

டெல்லி என்சிஆர் பகுதியில் அதிகளவு காற்று மாசுபாடு பதிவு

By: Nagaraj Mon, 09 Nov 2020 08:06:21 AM

டெல்லி என்சிஆர் பகுதியில் அதிகளவு காற்று மாசுபாடு பதிவு

டெல்லி என்சிஆர் பகுதி தொடர்ந்து அதிக அளவு மாசுபாட்டை பதிவு செய்தது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது.

காற்று மாசுபாட்டை குறைக்க அரசு விழிப்புணர்வு மூலமாகவும் பல்வேறு கட்டங்களாக நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. டெல்லியின் அண்டை மாநிலங்களில் நிகழும் பயிர்க்கழிவுகள் எரிப்பு போன்றவையும் காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைகிறது.

air pollution,people,corona,delhi,concern ,காற்று மாசுபாடு, மக்கள், கொரோனா, டெல்லி, கவலை

டெல்லி என்சிஆர் பகுதி தொடர்ந்து அதிக அளவு மாசுபாட்டை பதிவுசெய்தது கவலையைத் உண்டாக்குகிறது. இந்நிலையில் நேற்று காற்று மாசுபாட்டின் தரம் ( AQI) தொடர்ந்து 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளது. டெல்லியின் ஆனந்த் விஹர் பகுதியில் காற்று மாசுபாட்டின் தரம் 484- உடன் 'மிகவும் மோசமான' வகையில் உள்ளது.

கடுமையான காற்று மாசுபாடு காரணமாக எங்கு பார்த்தாலும் புகைப் படலம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ள சூழலில் காற்று மாசும் டெல்லி மக்களை வதைக்கிறது.

Tags :
|
|
|