Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்று மாசு .. பிஎம் 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிகம் கலந்துள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி 1 இடத்தில் உள்ளது

காற்று மாசு .. பிஎம் 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிகம் கலந்துள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி 1 இடத்தில் உள்ளது

By: vaithegi Thu, 18 Aug 2022 11:33:18 AM

காற்று மாசு ..  பிஎம் 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிகம் கலந்துள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில்  டெல்லி 1 இடத்தில் உள்ளது

டெல்லி : வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின்உயர்வாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசுபடுவது உயர்ந்து கொண்டே வருகிறது. உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 2 வது இடத்தில் உள்ளது. உலகளவில் 7,000-க்கும் மேற்பட்ட நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் பிஎம் 2.5 மற்றும் என்ஓ2 போன்ற இரண்டு தீங்கு விளைவிக்கும் மாசுகள்தான் காற்றில் அதிக அளவில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

air pollution,delhi ,காற்று மாசு,டெல்லி

இதனை தொடர்ந்து பிஎம் 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிகம் கலந்துள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் இந்திய தலைநகரமான டெல்லி முதல் இடத்தில் உள்ளது .அதற்கு அடுத்து கொல்கத்தா (இந்தியா ), கனோ (நைஜீரியா), லிமா (பெரு), டாக்கா (வங்கதேசம்), ஜகர்தா (இந்தோனேசியா), லாகோஸ் (நைஜீரியா), கராச்சி (பாகிஸ்தான்), பெய்ஜிங் (சீனா) மற்றும் அக்ரா (கானா) போன்ற நகரங்கள் உள்ளன.

தினை அடுத்து என்ஓ2 அதிகம் காற்றில் கலந்து பாதிக்கப்பட்ட நகரங்களில் உலகளவில் ஷாங்காய், மாஸ்கோ, டெஹ்ரான் (ஈரான்), செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (ரஷ்யா), பெய்ஜிங் (சீனா), கெய்ரோ (எகிப்து), அஸ்கபத் (துர்க்மெனிஸ்தான்), மின்ஸ்க் (பெலாரஸ்), இஸ்தான்புல் (துருக்கி), ஹோ சி மின் சிட்டி (வியட்நாம்) போன்றவை முதல் 10 இடங்களில் உள்ளன.

Tags :