Advertisement

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் திணறும் டெல்லி

By: Nagaraj Mon, 30 Nov 2020 9:01:27 PM

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் திணறும் டெல்லி

விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி திணறி வருகிறது என்றுதான் கூற வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பஞ்சாப், அரியான விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால், டெல்லி எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எனினும் விவசாயிகள் தொடர்நது போராடியதால் அவர்க மீது கண்ணீர் புகை குண்டு வீசி, தண்ணீர் அடித்து, தடியடி நடத்தினர் போலீசார். இதில் பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

எனினும் தொடர் போராட்டம் காரணமாக டெல்லியில் நுழைய அவர்களுக்கு காவல்துறை அனுமதி அளித்தது. தற்போது டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

farmers,struggle,delhi,agricultural laws ,விவசாயிகள், போராட்டம், டெல்லி, வேளாண் சட்டங்கள்

இதனிடையே டெல்லி எல்லையில் நடந்த போராட்டத்தின் போது வயதான விவசாயி ஒருவரை பாதுகாப்பு வீரர் தாக்க முற்படும் புகைப்படத்தை வெளியிட்டு ராகுல்காந்தி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தார். தற்போது அந்த புகைப்படம் வைரலானது. அதேபோல் இந்த போராட்டத்தின் நடுவே விவசாயி ஒருவர், போலீசாருக்கு தண்ணீர் கொடும் வீடியோ வைரலாகியுள்ளது.

வீடியோவை பதிவிட்டுள்ள குர்பிரீத் எஸ் சகோத்தா என்பவர், இந்த கடுமையான நாட்களில், கனிவுடன் நடந்துகொள்வது எங்கள் கடமையாகும். தாழ்மையுடன் இருக்கவும், சேவை செய்யவும், பகிர்ந்து கொள்ளவும், எங்கள் குரு கற்றுக்கொடுத்திருக்கிறார். இது எங்களின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி திணறிதான் வருகிறது.

Tags :
|