Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் ஓபன் புக் தேர்வுக்கான புதிய தேதிகளை வெளியிட்ட டெல்லி பல்கலைக்கழகம்

ஆன்லைன் ஓபன் புக் தேர்வுக்கான புதிய தேதிகளை வெளியிட்ட டெல்லி பல்கலைக்கழகம்

By: Nagaraj Tue, 14 July 2020 5:58:25 PM

ஆன்லைன் ஓபன் புக் தேர்வுக்கான புதிய தேதிகளை வெளியிட்ட டெல்லி பல்கலைக்கழகம்

ஓபன் புக் எக்ஸாம்... உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் டெல்லி பல்கலைக்கழகம் ஆன்லைன் ஓபன் புக் எக்ஸாமுக்கான புதிய தேதிகளை வெளியிட்டுள்ளது. இதன் படி, ஆகஸ்ட் 10’ஆம் தேதி தேர்வுகளின் தொடக்க தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 2.7 லட்சம் மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகள் தாமதத்தால் பாதிக்கப்படும் என்று கூறி பல்கலைக்கழகம் வழங்கிய அட்டவணையை சுருக்கியது. ஜூலை 31 முதல் முதல் மாக் டெஸ்ட்கள் தொடங்கும் என்று பல்கலைக்கழகம் என இன்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. இருப்பினும், நீதிமன்றம் தேதியை ஜூலை 27’ஆக மாற்றியது.

final year,students,open book exam,university of delhi ,இறுதியாண்டு, மாணவர்கள், ஓபன் புக் எக்ஸாம், டெல்லி பல்கலைக்கழகம்

2 வது செட் மாக் டெஸ்ட் ஆகஸ்ட் 4 முதல் தொடங்கும் என்றும் பின்னர் ஓபன் புக் எக்ஸாம் ஆகஸ்ட் 17 முதல் தொடங்கும் என்றும் டெல்லி பல்கலைக்கழகம் கூறியிருந்தது. இருப்பினும், விசாரணையின் போது நீதிமன்றம் அதை மாற்றி, இரண்டாவது செட் மாக் டெஸ்ட் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கப்பட வேண்டும் என்றும், ஓபன் புக் எக்ஸாம் ஆகஸ்ட் 10 முதல் தொடங்கும் என்றும் கூறியது.

மதிப்பீடு செய்வதற்கான தேதியை பல்கலைக்கழகம் அறிவிக்கும் என்றும், கால அட்டவணையை மனதில் வைத்து, எந்த தாமதமும் ஏற்படக்கூடாது என்று கருதுவதாகவும் நீதிமன்றம் கூறியது. வருடாந்திர வாக்குமூலத்தின்படி, நவம்பர் 30’ஆம் தேதிக்குள் மதிப்பீடு மற்றும் அறிவிப்பு முடிவடைந்திருக்கும். இருப்பினும், கால அளவைக் குறைத்து புதிய தேதிகளை வழங்க நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

ஓபன் போக எக்ஸாமுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் ஆஃப்லைன் தேர்வுகளிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் படி டெல்லி பல்கலைக்கழகம் ஆன்லைன் ஓபன் புக் எக்ஸாம்களை ஆகஸ்ட் 10’ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31’ல் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்த உள்ளது.

Tags :