Advertisement

சுவையான பிரட் ஆம்லெட் செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 07 Jan 2023 9:37:04 PM

சுவையான பிரட் ஆம்லெட் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: சுவையான பிரட் ஆம்லெட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


தேவையானபொருட்கள்:

முட்டை -3
ரொட்டித் துண்டுகள்-5
கடலை மாவு -ஒரு கப்
பெரிய வெங்காயம்- 1
குடைமிளகாய்-1
கேரட்-1
உப்பு -தேவையான அளவு

egg,breadcrumbs,chickpea flour,big onion ,முட்டை,  ரொட்டித் துண்டுகள், கடலை மாவு, பெரிய வெங்காயம்

செய்முறை: கேரட் ,வெங்காயம் ,குடைமிளகாய் மூன்றையும் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . கடலை மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

முட்டையில் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ரொட்டித் துண்டுகளை கடலை மாவில் நனைத்து அதன் மேல் இரண்டு புறமும் காய்கறி துண்டுகளை தூவ வேண்டும். காய்கறியின் மேல் வெள்ளைக் கருவை தடவி தோசைக் கல்லில் ஆம்லெட் போல வேக வைத்து எடுத்தால் சுவையான பிரெட் ஆம்லெட் தயார்.

Tags :
|