Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 1 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு

1 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு

By: Monisha Fri, 12 June 2020 09:28:19 AM

1 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. நாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு 38 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 349 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகமான அளவில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது.

south korea,tamil nadu ,1லட்சம்,பி.சி.ஆர்.கருவிகள்,தென்கொரியா,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து இன்று மேலும் 1 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் தமிழகம் வந்தன. இந்த கருவிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தேவையின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்படும். இதனால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.

வாரம் 1 லட்சம் என்ற அளவில் இதுவரை மொத்தம் 6 லட்சத்து 27 ஆயிரம் கருவிகள் வந்துள்ளது. பி.சி.ஆர். என்பது ரேபிட் டெஸ்ட் போன்று இல்லை. முடிவு வருவதற்கு சற்று நேரம் ஆனாலும் சரியான முடிவுகளை காட்டும்.

Tags :